பாறுக் ஷிஹான்-
இந்திய தமிழ்நாடு, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்ட "பசுமை வாசல் பவுண்டேஷன்" அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு சர்வதேச ரீதியில் பல்துறை சாதனையாளர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி கற்று வரும் இலங்கையின் இளம் பசுமை மீட்சி செயற்பாட்டாளர் துடிப்பும், துள்ளலும் கொண்ட, இளமையில் படைப்பாற்றலும் சேரும் பொழுது உலகைப் பார்க்கும் பார்வை விசாலமடைகிறது. புதிய சிந்தனையால் படைப்புலகில் சிறப்புப்பெற்ற மின்மினி மின்ஹாவுக்கு "இளம் மணிச்செம்மல் விருது-2025" வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது 10 வயதிலிருந்து மாவட்ட, தேசிய, சர்வதேச மட்டங்களில் 39க்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவப் பட்டங்களையும் பெற்றுக்கொண்ட சிறுமியாவார்.
10 இலட்சம் நபர்களை இலக்காய் கொண்டு "சுற்றுச்சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி" என்ற சாதனைக்குரிய இவர், சுயாதீன முறையில் கல்வி, நிருவாக உயரதிகாரிகளின் அனுமதியுடன் சுற்றுச்சூழல் தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக இரண்டு இலட்சம் பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் முன்னிலையில் விழிப்புணர்வு உரையினையும் மேற்கொண்டுள்ளார்.
இவற்றுக்கும் மேலாக 'ஊணுக்கு உதவுவோம்' எனும் ஏழைகளுக்கும் விசேட தேவையுடையோருக்கும் பசியோடு வாழும் குடும்பங்களுக்கு உதவும் வேலைத்திட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதுடன், இவ்விணையத்தள விருது சான்றிதழ் எண் 7C-31 ஆனது அண்மையில் (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.