சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக உழவு இயந்திரம் மூலமாக மணல் கடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப் பட்ட உழவு இயந்திரத்தையும் சம்மாந்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் இன்று (06) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தை பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை கைது செய்துள்ளனர். அத்தோடு மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட குறித்த உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மேற்படி நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.
குறித்த உழவு இயந்திரத்தை பொலிஸார் பரிசோதனை செய்த போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றுவது தெரியவந்துள்ளது .
மல்வத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து மணல் மீட்கப்பட்டிருப்பதுடன், சந்தேக நபர் மற்றும் உழவு இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரனதுங்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான சார்ஜன் அநுர, சார்ஜன் அசோக்க உள்ளிட்ட அதிகாரிகள் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.