Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலும் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத் திட்டம் முன்னெடுப்பு.

கெளரவ ஜனாதிபதி அவர்களுடைய கொள்ளைக்கு அமைவாக  "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தினை வினைதிறன்மிக்கதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் செயற்படுத்தும் பொருட்டு இன்று(26) சம்மாந்துறை கல்லரிச்சல் பொட்டியர் சந்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்  இடம்பெற்ற இந்நிகழ்வில்  கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்கள் கலந்து கொண்டதுடன் சம்மாந்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயேவிக்ரம அவர்கள், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ கமல் நெத்திமி உட்பட தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ரிசாட் எம் புஹாரி,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத்,  சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன், சுகாதார வைத்திய அதிகாரி Dr. நெளஸாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகள்,பொது நிறுவனங்களின் உறுப்பினர், சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இன்றைய தினம் குறிப்பாக சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம்,அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் போன்ற  இடங்களில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றன.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe