Ads Area

சம்மாந்துறை வைத்தியசாலையில் வைத்தியர்கள் வேலைப் பகிஸ்கரிப்பில்!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

நேற்று முன்தினம், அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு  உள்ளாக்கப்பட்டிருந்தார்.  


இதனைக் கண்டித்தும், குறித்த நபரை கைது செய்யுமாறும் கோரியும் இன்று (12) புதன்கிழமை வைத்தியர்கள் வேலைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.


இதற்கு அமைவாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் இன்று (12) புதன்கிழமை காலை முதல் வேலைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். 


இதனால் வெளி நோயாளர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அவசர சிகிச்சை பிரிவு செய்யடமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe