Ads Area

சம்மாந்துறையில் பழுதடைந்த பழங்களை விற்ற கடை உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிப்பு.

(பாறுக் ஷிஹான்)


மனிதப்பாவனைக்குதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா  50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.


பழுதடைந்த பழ விற்பனை தொடர்பாக  வாடிக்கையாளரொருவர்  (14) மேற்கொண்ட  முறைப்பாட்டையடுத்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட  சில பழ விற்பனை நிலையங்கள் யாவும் திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.


இதன் போது பழுதடைந்த பழங்களை விற்பனை செய்த  கடை அடையாளங்காணப்பட்டு பரிசோதனை செய்த போது பல பழுதடைந்த பழங்கள் மீட்கப்பட்டன.


கடந்த வியாழக்கிழமை (13) அன்று கைப்பற்றப்பட்ட மனிதப்பாவனைக்குதவாத சில கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சேர்த்து இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சட்டநடவடிக்கைக்காக சமர்ப்பித்த வேளை  5 விற்பனை நிலையங்களுக்கு தலா ரூபா 20,000, இரு கடைகளுக்கு ரூபா 10,000, இரு கடைகளுக்கு ரூபா 5,000 என மொத்தமாக ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.


அத்துடன், பொதுமக்கள் தங்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது விழிப்பாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe