Ads Area

அரசறிவியல் பாடம் உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக நுழைவுக்கு வாய்ப்பாக இருக்குமா..??

SAFEER HAMEED (LLB. Hons) 

BA Special in Political science, 

MPhil (R) Political Science, Att. at. Law (R)

Teacher of Political Science & Islam


கலைப் பிரிவில் தோற்றுகின்ற மாணவர்கள் மத்தியில் அரசறிவியல் பாடம் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் சில கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் அரசறிவியல் பாடம் உயர்தரப் பிரிவிற்கு பொருத்தமற்ற பாடம் என்றும் அப்பாடத்தை கற்பதனால் பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை பெற முடியாமல் போய்விடும் என்றும் வெட்டுப் புள்ளி குறைந்த பாடம் என்றும் அந்த பாடத்தை எடுப்பது வீணானது என்றும் பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையாக இந்த பாடம் பற்றி அறிந்து கொள்கின்ற போது இவர்களால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்பது மட்டுமின்றி ஒரு காழ்ப்புணர்வின் காரணமாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் என்று கண்டுகொள்ள முடிகின்றது.


அந்த அடிப்படையில் இந்த  கட்டுரையானது மாணவர்கள் அரசறிவியல் பாடத்தை பற்றி தெளிவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு எழுதப்படுகின்றது. இதற்கான ஆதாரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் இருந்தும் கல்வி அமைச்சினால் வெளியிடுகின்ற புள்ளி பகுப்பாய்வு ஆவணங்களில் இருந்தும் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. 


➡️ க. பொ. த உயர் தர பிரிவில் அரசறிவியல் பாடமானது பின்வரும் வகையில் சிறப்பும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.


1. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கற்கைகளில் ஒன்று என்பதுடன் அனைத்து பிரபல பல்கலைக்கழகங்களிலும் தனித்துறையாக கற்கப்படும் கற்கை


2. தனிச் சிறப்பம்சங்களை கொண்டுள்ள சமூக விஞ்ஞானப் பாடங்களுள்  அரசறிவியல் பாடமும் ஒன்று


3. உயர் பெறுபேறுகளை பெற்றுத் தரும் பாடங்களில் அரசறிவியல் பாடமும் ஒன்று


4. பல்கலைக் கழகங்களில் பல கற்கை துறைகளுக்கான வாய்ப்பை வழங்கும் கற்கைகளுள்  அரசறிவியல் பாடமும் ஒன்று


5. பல உயர் தொழில்களை பெற்றுக் கொள்ள வசதியளிக்கும் கற்கைகளுள்  அரசறிவியல் பாடமும் ஒன்று


6. மாணவர்கள் இலகுவாக அதிகமான புள்ளிகளை பெறும் வகையில் கட்டமைப்பை உடைய வினாத்தாள் வடிவமைப்பு கொண்ட பாடங்களில் அரசறிவியல் பாடமும் ஒன்று.


7. இப்பாடத்தை தேர்வு செய்கின்ற மாணவர்கள் பாடத்திட்டத்தை மட்டுமன்றி பல பொதுவான விடயங்களையும் அறிந்து கொள்கின்றனர்.


8. கலைத்துறையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களுள் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் அரசியல் விஞ்ஞான பாடத்தை ஒரு பாடமாக கொண்டவர்களாவர்.


9. இப்பாடத்தை மாணவர்கள் கற்றுக் கொள்வதன் மூலம் கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் சட்டத்துறைகளுக்கு தெரிவாகும் பட்சத்தில சட்டத்துறை கற்கைகளில் சிறந்து விளங்க முடிகின்றது. ஏனெனில் சட்டத்துறையின் பாடத்திட்டத்தில் உள்ள பல எண்ணக்கருக்கள் அரசியல் பாடப் பரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


10. இப்பாடத்தை தேர்வு செய்து கற்பதன் மூலம் ஒரு விடயத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் விமர்சன ரீதியாக நோக்குகின்ற ஆற்றலையும் தர்க்கம் புரிகின்ற ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் தான் பல்கலைக்கழகங்களிலும் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர்கள் விஷேடத் திறனாற்றல் உடையவர்களாக நோக்கப்படுகின்றனர்.


இதனால் தான் ஒவ்வொரு வருடமும் இந்த அரசறிவியல் பாடத்தை அதிகம் மாணவர்கள் தேர்ந்தெடுத்து கற்றுக் கொள்கின்றனர்.  இந்த பாடத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையாக இருந்தால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்த பாடத்தை எடுப்பதில் போட்டி போடமாட்டர்கள்.


➡️  கலை பிரிவில் அரசறிவியல் பாடத்துக்கு கடந்த 7 ஆண்டுகள் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை இதற்கு சான்றாகும்.


✅ 2017 ஆம் ஆண்டில் 45982 மாணவர்களும் 

✅ 2018 ஆண்டில் 48273 மாணவர்களும்

✅ 2019 ஆம் ஆண்டு 46801மாணவர்களும்

✅ 2020 ஆம் ஆண்டு 45221 மாணவர்களும் 

✅ 2021 ஆம் ஆண்டு 41825 மாணவர்களும் 

✅ 2022 (2023) ஆம் ஆண்டு சுமார் 38237 மாணவர்களும்


✅ 2023(2024) ஆம் ஆண்டு சுமார் 32,000 க்கு அதிகமான மாணவர்கள் இப்பாடத்தை தெரிவு செய்து உயர்தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றிருக்கின்றார்கள். (தகவல் : performance of candidates . GCE. A/L Examination 2017 - 2022, Department of Education)


➡️ பல்கலைக் கழகங்களில் கலைப் பிரிவில் நேரடியாக 15 கற்கைகளும் ஏனைய கற்கைகளில் இருந்து 29 கற்கைகளும் மொத்தமாக 44 கற்கைகள் காணப்படுகின்றன. அவற்றுள், 


➡️  அரசறிவியல்  பாடத்தின் மூலம் கிடைக்க  வாய்ப்புள்ள பல்கலைக்கழக  கற்கைகள் பின்வருமாறு 👇


1️⃣ சட்டம் (Law)

👉🏻கொழும்பு, பேராதனை, யாழ் பல்கலைக்கழகங்கள்

👉🏻LLB Digree

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 495 


2️⃣ வடிவமைப்பு (Design)

👉🏻மொறட்டுவ பல்கலைக்கழகம்

👉🏻4 வருடம்

👉🏻வடிவமைப்பு கெளரவ இளமானி

👉🏻உத்தேச  அனுமதி - 87


3️⃣ நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்

(Fashion Design And Product Development)

👉🏻மொறட்டுவ பல்கலைக் கழகம்

👉🏻4 வருடங்கள்

👉🏻B.des Hons

👉🏻உத்தேச  அனுமதி - 79


4️⃣ முகாமைத்துவக் கற்கைகள் (TV)

Management Studies (TV)

👉🏻 வவுனியா பல்கலைக்கழகம், இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (திருகோணமலை வளாகம்)

👉🏻BBM

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 458


5️⃣ கலை - தகவல் தொழில்நுட்பம் (IT)

(புதிய கற்கைநெறி)

👉🏻சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

👉🏻BA Hons IT

👉🏻04 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 50


6️⃣ பட்டினமும் நாடும் திட்டமிடல்

(Town and Country Planning)

👉🏻மொறட்டுவை பல்கலைக்கழகம்

👉🏻4 வருடங்கள்

👉🏻Bsc Digree

👉🏻உத்தேச  அனுமதி - 88


7️⃣ தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்

(Entrepreneurship And Management)

👉🏻ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

👉🏻BA Hons

👉🏻04 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 101


8️⃣ முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL)

(Management And Information Technology)

👉🏻தென்கிழக்கு பல்கலைக்கழகம்

👉🏻03 வருடம்

👉🏻Bsc

👉🏻உத்தேச  அனுமதி - 170


9️⃣ கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்

(Industrial Information Technology)

👉🏻ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

👉🏻Bsc Hons IIT

👉🏻04 வருடம்

👉🏻உத்தேச  அனுமதி - 100


1️⃣0️⃣ உடற்றொழில் கல்வி

(physical Education)

👉🏻சப்ரகமுவ பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம்

👉🏻04 வருடங்கள்

👉🏻Bsc Hons (physical Education)

👉🏻உத்தேச  அனுமதி - 147


1️⃣1️⃣ விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்

 (Sports science And Management)

👉🏻சப்ரகமுவ, ஜயவர்தனபுர, களனி போன்ற பல்கலைக்கழகங்கள்

👉🏻04 வருடங்கள்

👉🏻Bsc Hons (sports science and management)

👉🏻உத்தேச  அனுமதி - 228


1️⃣2️⃣ பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும்

(speech And Hearing Sciences)

👉🏻களனி பல்கலைக்கழகம்

👉🏻04 வருடங்கள்

👉🏻Bsc

👉🏻உத்தேச  அனுமதி - 75


1️⃣3️⃣ விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்

(Hospitality, Tourism and Event Management)

👉🏻ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.

👉🏻04 வருடம்.

👉🏻BA Hons

👉🏻உத்தேச  அனுமதி - 107


1️⃣4️⃣ தகவல் முறைமைகள்

(Information Systems)

👉🏻கொழும்பு பல்கலைக்கழக கணணிக் கல்லூரி

👉🏻தகவல் முறைமைகள் விஞ்ஞான இளமானி பட்டம்

👉🏻 03 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 350


1️⃣5️⃣ மொழி பெயர்ப்பு கற்கைகள்

(Translation Studies)

👉🏻களனி, சப்ரகமுவ, யாழ், கிழக்கு போன்ற பல்கலைக்கழகங்கள்

👉🏻04 வருடங்கள்

👉🏻BA

👉🏻(ஆங்கிலம்/தமிழ்)

    (ஆங்கிலம்/சிங்களம்)

👉🏻உத்தேச  அனுமதி - 138


1️⃣6️⃣ திரைப்படமும் தொலைக்காட்சி கற்கைகள்

(Film & Television Studies)

👉🏻களனிப் பல்கலைக்கழகம்

👉🏻இளங் கலைமானி 

👉🏻04 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 60


1️⃣7️⃣ செயற்திட்ட முகாமைத்துவம்

(Project Management)

👉🏻யாழ். பல்கலைக்கழகம் (வவுனியா வள௧கம்)

👉🏻BBMH Hons

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 101


1️⃣8️⃣ புவியியல் தகவல் விஞ்ஞானம்

(Geographical Information Science)

👉🏻 பேராதனை பல்கலைக் கழகம்

👉🏻4 வருடங்கள்

👉🏻 Bsc Digree

👉🏻உத்தேச  அனுமதி - 75


1️⃣9️⃣ மனித வள மேம்பாடு

(Human Resource Development)

👉🏻ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம்

👉🏻BBMH Hons

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 85


2️⃣0️⃣ சமூகப்பணி கற்கைநெறி  (Social Work)

👉🏻பேராதனை பல்கலைக்கழகம்

👉🏻04 வருடம்

👉🏻BSW Hons Digree

👉🏻உத்தேச  அனுமதி - 101


2️⃣1️⃣ ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்றல் (TESL)

👉🏻களனி, சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.

👉🏻04 வருடங்கள்

👉🏻BA Hons (second Language In English)

👉🏻உத்தேச  அனுமதி - 101


2️⃣2️⃣ கலை (Arts)

👉🏻கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, உறுகுணை, பேராதனை, யாழ்ப்பாண, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம்

👉🏻3/4 வருடம்

👉🏻உத்தேச  அனுமதி - 7059


2️⃣3️⃣ கலை(ART-SAB)

👉🏻சப்ரகமுவ பல்கலைக்கழகம்

👉🏻03 வருடம்/ 04 வருடம் Hons

👉🏻உத்தேச  அனுமதி - 309


2️⃣4️⃣ கலை (SP) Arts 

👉🏻ஸ்ரீபாளி வளாகம், கொழும்புப் பல்கலைக்கழகம்

👉🏻 4 வருடம் 

👉🏻உத்தேச  அனுமதி - 220


2️⃣5️⃣தொடர்பாடல் கற்கை நெறி (Communication Studies )

👉🏻கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம்

👉🏻 BA/BA Hons

👉🏻03 /04 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 200


2️⃣6️⃣ சமாதானமும், முரண்பாடு கற்கைநெறி ( peace and conflict resolution )

👉🏻களனி பல்கலைக்கழகம்

👉🏻04 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 36


2️⃣7️⃣ யோகா மற்றும் மனநிகழ்வுகளின் ஆய்வு

(Yoga and Parapsychology) 

👉🏻கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்

👉🏻BScHons (Yoga and Parapsychology)]

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 70


2️⃣8️⃣ சுதேச அறிவியல் மீதான சமூகக் கல்வி

(Social Studies in Indigenous Knowledge) .

👉🏻இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்

👉🏻BScHons 

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 70


2️⃣9️⃣ ஆக்கத்திறன் இசை தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறன்

(Creative Music Technology and Production)  

👉🏻ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்

👉🏻BAHons (Crtv Mus Tech & Prod)

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 50


3️⃣0️⃣ ஆங்கில மொழி மற்றும் பிரயோக மொழியில் ( English language & applied linguistic )

👉🏻 ஊவா வெல்லஸ்ஸா

👉🏻  BA. Hons English 

👉🏻 4 வருடம் 

👉🏻உத்தேச  அனுமதி - 50


3️⃣1️⃣ ஆரம்பக் கல்வி (Primary Education) 

👉🏻கொழும்பு பல்கலைக்கழகம்

👉🏻BEdHons (Prim Ed)

👉🏻4 வருடங்கள்

👉🏻உத்தேச  அனுமதி - 75


📌 மேற்படி கற்கைகளில் சில கற்கைகளுக்கு அரசறிவியல் பாடம் போதுமானதாக இருக்கும்;  சில கற்கைகளுக்கு அரசறிவியல் பாடத்தோடு வேறு சில பாடங்களுடைய துணை தேவைப்படக் கூடியதாக இருக்கும் 


📌 இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி, கட்டடக் கலை, ICT, மற்றும் கலைப் சித்திரம், இசை, நாடகம், நடனம் ஆகிய கற்கைகளுக்கு கூட அரசறிவியல் பாடத்தை துணைப் பாடமாக கொண்டு பல்கலைக் கழகம் நுழைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.


➡️  பல்கலைக்கழக நுழைவுக்கான மற்றும் ஒரு வாய்ப்பு அரசறிவியல் மூலம் கிடைக்கிறது. அதாவது.


✅ பல்கலைக்கழக விசேட பாடங்களுக்கான உள்ளீர்ப்பு /மேலதிக அனுமதி கொள்கை அடிப்படையில் பாடவாரியாக மாணவர்கள் விசேட உள்ளீர்ப்பின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு நுழைவைப் பெறும் பாடங்களில் அரசறிவியல் பாடமும் முதன்மையானதாகும். இதற்கு  அந்த மாணவர் அரசறிவியலில் "C" தரத்தை பெறுதல் போதுமானதாகும்.  அந்த பாடத்தை ஒரு பாடமாகக் கொண்டே தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும்.


அரசறிவியல் பாடம் பாடத்திட்டம், பரீட்சை என்று இல்லாமல் கலைத்துறை மாணவர்களை ஒரு ஆளுமை உள்ளவர்களாக மாற்றுவதில் இப்பாடத்திற்கு பெரும்பங்குண்டு.  இதனால்தான் அரசியல்வாதிகள் தொடக்கம் பாடப்பரப்பே தெரியாத ஆசிரியர்கள் வரை பலர்  இந்த பாடத்தை விமர்சனம் செய்வதை பார்க்கலாம். 


எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வருடா வருடம் 42,000ற்கும் அதிகமான மாணவர்கள் இக்கற்கையை தெரிவு செய்து கற்கின்றார்கள் என்பது இப்பாடத்தின் மீதான இலகுதன்மை, முக்கியத்துவம்  இன்றி வேறு எதுவும் இல்லை.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe