ஜம்மு காஷ்மீரில் 23 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஜம்மு காஷ்மீரில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மனிதகுலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்," என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.