கடவத்தையில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவர் பெருமளவிலான போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 82(3) பிரிவின் கீழ் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
மாலபே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் 13 கிலோ 372 கிராம் ஹெரோயினுடன் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோக நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வீடொன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வளாகத்தை சோதனையிட்ட அதிகாரிகள், ஒரு அறையில் ஒரு பயணப் பைக்குள் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்து, சந்தேக நபரைக் கைது செய்தனர்.
விசாரணையின் போது, சந்தேகநபர் மஹர பகுதியைச் சேர்ந்த 'மோரின்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் பெயரை வெளிப்படுத்தினார்.
சந்தேகநபரான இமேஷ் மதுஷங்க, கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.