Ads Area

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வரும் வாக்குப்பதிவு.

 (பாறுக் ஷிஹான்)


2025ம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தல்  அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்    வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தல்  வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தற்போது வரை 24.5 வீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம   தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 478,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2025ம் ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் மாவட்டத்திலுள்ள 19 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும். இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்குப் பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும். 


பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகள் குறித்து உதவித்தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார். தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர்தொழிநுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.


இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாகவுள்ளதுடன், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை. எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பூடாக கிடைக்கப்பெற்றிருந்தன.


மேலும், தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. மேலும் வாக்களிப்பு நிலையமான அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe