சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ( Dialysis Machine ) தேவைப்படுவதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர் சம்மாந்துறை முச்சபைகளிடம் விடுத்த வேண்டுகோளுக்கு சென்ற வெள்ளிக்கிழமை (06) சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜூம்ஆ பள்ளிவாசலில் வைத்து பொதுமக்கள் முன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர் உரையாற்றும் போது " சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை ஆரம்பிக்கும் போது இரண்டு சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ( Dialysis Machine ) காணப்பட்டது. பின்னர் அது நான்காக மாறியது இதற்கு இது ஐந்தாவது சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ( Dialysis Machine ) ஆக காணப்படும்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தொலைநோக்கு இப்பிராந்தியத்திலேயே ஆகப்பெரிய சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ( Dialysis Machine ) காணப்படும் பிரிவை உருவாக்குவதாகும் அதனை எதிர் வரும் ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வோம் என்றார்.
இந்நிகழ்விற்கு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உயர் அதிகாரிகள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், முன்னாள் அமைச்சின் செயலாளரும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் எம்.ஐ. அமீர், மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.