Ads Area

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆகியோர் பசு மாடுகள் இறக்குமதியில் 110 மில்லியன் அமெரிக்க டாலர் ஊழல்.

முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, பி. ஹாரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். "அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது" என்று அவர் கூறினார்.


பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.


செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe