25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராகப் பணிபுரிந்து வரும் நான், இளம் வயதினரிடையே - குறிப்பாக இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் - மாரடைப்பு அதிகரித்திருப்பதை கவலையுடன் அவதானிக்கிறேன்.
40 வயதிற்குட்பட்டவர்களிடையே அரிதாக இருந்த நிலை இப்போது அச்சுறுத்தும் அளவில் பொதுவானதாகிவிட்டது.
ஒவ்வொரு மாதமும், 20களின் பிற்பகுதியிலும் 30களின் முற்பகுதியிலும் உள்ளவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களை நான் சந்திக்கிறேன் - அவர்களில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய நோய் காரணிகள் இல்லாதவர்கள்.
இந்த திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம்⁉️
எனது தொழில்முறை கருத்துப்படி, இதற்கு முக்கிய காரணம் நவீன வாழ்க்கை முறை தேர்வுகள் - குறிப்பாக,
📛 மோசமான உணவு,
📛 உடல் உழைப்பின்மை,
📛 நாள்பட்ட மன அழுத்தம்
📛 மற்றும் போதுமான தூக்கமின்மை.
இவை வெறும் "மோசமான பழக்கங்கள்" மட்டுமல்ல. அவை inflammation, Oxidative damage மற்றும் இதய நாடிகளில் (Coronary artery) ஆரம்ப கட்ட அடைப்பு (Plaque) உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணங்கள்.
நவீன உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள் ஆரம்ப இருதய நோய்க்கு மிகவும் கவனிக்கப்படாத காரணிகளில் ஒன்றாகும்.
மோசமான உணவு, குறிப்பாக இவற்றின் நுகர்வு:
❌ 1. சீனி ) சர்க்கரை (Refined Sugar)
சர்க்கரை வெறும் "கலோரி" மட்டுமல்ல. அது ஒரு சக்திவாய்ந்த inflammatory & Oxidative காரணி. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இன்சுலின் எதிர்ப்பு, Metabolic syndrome மற்றும் இருதய நாடிகளின் உட்புறத்தை சேதப்படுத்தி Plaque எனும் அடைப்பு உருவாவதற்கு தூண்டுகிறது.
இலங்கையில், சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களின் நுகர்வு பரவலாக உள்ளது - குறிப்பாக இளைஞர்களிடையே. இது பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினரிடையேயும் டைப் 2 நீரிழிவு நோய் அதிகரிப்பதில் பிரதிபலிக்கிறது.
❌ 02. விதை / மரக்கறி எண்ணெய்கள் (Seed Oils - Industrial Vegetable Oils)
பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் சூரியகாந்தி, கனோலா, சோயாபீன், மக்காச்சோளம் மற்றும் பாமாயில் போன்ற எண்ணெய்களில் சமைக்கப்படுகின்றன.
இவற்றை நாம் விதை எண்ணெய்கள் என்று அழைக்கிறோம். இந்த எண்ணெய்களில் ஒமேகா-6 நிரம்பாத கொழுப்பு அமிலங்கள் (PUFAகள்) அதிகமாக உள்ளன, அவை மிகவும் நிலையற்றவை மற்றும் சூடுபடுத்தும் போது ஆக்சிஜனேற்றத்திற்கு ஆளாகின்றன.
இது Free Radicalகளை உருவாக்குகிறது. இவை இரத்த நாடிகளின் உள் அடுக்கான எண்டோடெலியத்தை சேதப்படுத்தும் அதிக வினைத்திறன் கொண்ட மூலக்கூறுகள். இது அடைப்பு (Plaque) உருவாக்கத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதற்கு மாறாக, தேங்காய் எண்ணெய் (இலங்கையில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது) மற்றும் ஆலிவ் எண்ணெய் (Olive Oil) ஆகியவை மிகவும் நிலையானவை மற்றும் இதயத்திற்கு உகந்தவை.
❌ 03. அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-Processed Foods)
கிட்டத்தட்ட ஒவ்வொரு பாக்கெட் சிற்றுண்டியிலும் அல்லது துரித உணவிலும் சர்க்கரை அல்லது விதை எண்ணெய்கள் - அல்லது இரண்டும் உள்ளன. இந்த உணவுகள் அதிக சுவையூட்டப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து உட்கொள்ளும் போது இருதய அமைப்புக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை.
❌ 04. உடல் உழைப்பற்ற வாழ்க்கை: ஒரு நவீன கொலையாளி (Sedentary life - A modern killer)
இன்று பல இளைஞர்கள் உடல் உழைப்பற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். திரை நேரம் (screen time), பயணம் அல்லது வேலை காரணமாக, தினசரி உடல் அசைவு கணிசமாகக் குறைந்துள்ளது. உடல் உழைப்பின்மை இன்சுலின் எதிர்ப்பு, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் அதிகரித்த உடல் கொழுப்புக்கு வழிவகுக்கிறது.
இது வெளிப்படையாக அதிக எடை இல்லாதவர்களிடையேயும் கூட காணப்படுகிறது.
🛑 எனது பரிந்துரை:
❤️ குறைந்தபட்சம், வாரத்திற்கு ஐந்து நாட்களாவது 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.
அதற்காக Gymஇல் சேரவேண்டும் என்ற தேவையில்லை. நடைபயிற்சி உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை.
❤️ மறக்கப்பட்ட மிக முக்கியமான விடயம்: தூக்கம்
பல இளம் வல்லுநர்களும் மாணவர்களும் உற்பத்தித்திறன் அல்லது பொழுதுபோக்கிற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள்.
ஆனால் தூக்கமின்மை ஒரு பெரிய இருதய ஆபத்து காரணி என்பதை அவர்கள் உணருவதில்லை.
மோசமான தூக்கம் மன அழுத்த ஹார்மோன் அளவை (Cortisol போன்றவை) அதிகரிக்கிறது, குளுக்கோஸ் சமிபாடடைவதை பாதிக்கிறது, மற்றும் இரத்த குழாய்களை சேதப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது.
ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 7 மணிநேர தரமான தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள். இது ஒரு ஆடம்பரம் அல்ல - இது ஒரு மருத்துவ அவசியம்.
இறுதியாக: இருதய நோய்கள் தடுக்கக் கூடியவை.
இருதய நோய் இனி பெற்றோரின் பிரச்சனை மட்டுமல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இது இப்போது இளம் வயதினரின் நோய்.
இருதய பிரச்சினைகள்ஸசத்தமின்றி, ஊர்ந்து பரவுபவை. கவனிக்காதபோது பெரும்பாலும் மரணத்தை விளைவிப்பது. Silent Killer
ஆனால் இது தவிர்க்க முடியாதது அல்ல. நல்ல செய்தி என்னவென்றால், ஆரம்பகால வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. அபாயகரமானதாக மாறுவதற்கு முன்பு இந்த ஆபத்து காரணிகள் பலவற்றை நீங்கள் மாற்றியமைக்கலாம்.
ஒரு இருதயநோய் நிபுணராக, 40 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் எனது ஆலோசனை இங்கே:
💞 சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும். (Refined Sugar & Processed carbs)
💞 விதை எண்ணெய்களைத் தவிர்க்கவும் - தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும்.
💞 உங்கள் உணவில் இருந்து அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும்.
💞 தினமும் உங்கள் உடலை அசைத்து நடக்கவும்.
💞 ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் தூங்குங்கள்.
💞 உங்கள் உடலைக் கவனியுங்கள். அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது நெஞ்சு இறுக்கத்தை புறக்கணிக்காதீர்கள்.
குறிப்பாக குடும்ப வரலாறு இருந்தால், 20களின் பிற்பகுதியிலிருந்து வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் இதயம் ஓய்வு பெறும் வரை காத்திருக்காது நீங்கள் இப்போது அதைக் கவனித்துக் கொண்டால், அது உங்களுக்கு வெகுமதி அளிக்கும்.
தமிழில்: Ziyad Aia