சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் நேற்று வருடாந்த பாடசாலை சுகாதாரப் பரிசோதனைகள் நடைபெற்றன. முதலாம், நான்காம், ஏழாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந் நிகழ்வில் பொதுவான மருத்துவப் பரிசோதனைகளுடன், குறிப்பிட்ட சில பாடசாலைத் தடுப்பூசி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு எதிரான HPV தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது.
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு aTd தடுப்பூசி (ஏற்புத் தடை மருந்து) போடப்பட்டது.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்குணவின் தரமும் இச்சந்தர்ப்பத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.