சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம் நஜாகத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண நில அளவையாளர் நாயகம் எம்.டி.எம் ரபீக் அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,நில அளவைத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் ஜி.ஆர்.எல் பெரேரா,சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் (SLIATE) பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா பிரதேச நில அளவை காரியாலய அத்தியட்சகர்கள்,நில அளவையாளர்கள்,ஏனைய திணைக்களங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவின் ஆலோசனையின் பெயரிலும் பிரதேச செயலாளரின் முயற்சியாலும் இக் கட்டிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நில அளவைத் திணைக்களத்திற்கான இவ் கட்டிடம் திறந்தமையினால் சம்மாந்துறை, இறக்காமம் ,சென்றல்கேம்ப் போன்ற பிரதேசங்களின் உள்ள பொது மக்கள் நன்மையடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.