சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களின் உறையுள் தேவைக்காக OCD அமைப்பின் தலைவரின் எண்ணக்கருவில் உருவான "யாவருக்கும் உறையுள் " எனும் தொனிப்பொருளில் நிர்மானிக்கப்படவுள்ள 16 ஆவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வியாழக்கிழமை (10) உடங்கா -2 ஜமாலியா மஹல்லாக்குட்பட்ட பகுதியில் OCD அமைப்பின் அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேசசபையின் உறுப்பினருமான சகோதரர் ஆசிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவகருமான அஸ்மி யாஸீன் மற்றும் சம்மாந்துறை பிரதேசசபையின் தவிசாளரான அல்ஹாஜ் ஐ.ல்.ம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து அடிக்கல் நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேசசபையின் உறுப்பினர்களான,எ.எச்.எம்.காலித்,எஸ்.எல்.எம்.பஹ்மி,எ.சி.எம்.நயீம்,வை.எல்.பசீல் மற்றும் முன்னால் வங்கி முகாமையாளரான மன்சூர் ஆகியோரின் பங்குபற்றலில் நடைபெற்றது.