Ads Area

கல்முனைப் பிராந்தியத்தில் பழுதடைந்த பழ விற்பனை - களத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்.

 பாறுக் ஷிஹான்.

 

சுகாதாரம் மற்றும் தரமிக்க உணவுப்பொருட்களைப் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பழக்கடைகள் என்பவற்றில் திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (26) காலை பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.


இதேவேளை, சாய்ந்தமருது கடற்கரை வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த ஒரு தொகை பழங்களும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.


குறித்த இடத்தில் பழுதடைந்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து, அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பழுதடைந்த பழங்களைக் கைப்பற்றியதுடன், வியாபாரிக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe