Ads Area

பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு பிரியாவிடை.

 (பாறுக் ஷிஹான்) 


கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றியபிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின் இடமாற்றத்தை முன்னிட்டு  அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (26) மாலை  சமூகப்பொலிஸ் பிரிவுப்பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ.வாஹிட் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அவரது சேவைக்காலத்தில் பொதுமக்கள் மற்றும்  பொலிஸ் நிலையத்திற்குமிடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது. இதனால் கல்முனை தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய கொள்ளை, திருட்டுச்சம்பவங்கள் இடம்பெறாமல் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.


இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 


கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் அவர்களின் சேவைக்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.


அதுமட்டுமின்றி, விசேடமாக போதைப்பொருள் ஒழிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தனது முழுமையாக அர்ப்பணித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதன் போது பிரியாவிடை பெற்றுச்செல்லும் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் கருத்துத்தெரிவிக்கையில்,


கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எனது தலைமையின் கீழ் பல்வேறு பெருங்குற்றப்பிரிவு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் என நினைக்கும் போது பெருமையாகவுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியாக இருந்தனர். இவ்வாறு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்விற்கு கல்முனை தலைமையக பொலிஸ்  மோட்டார் போக்குவரத்துப்பிரிவுப்பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.சுவர்ணகாந்தி உட்பட பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டு அவரின் சேவையைப்பாராட்டி நினைவுப்பரிசுப்பொருட்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe