Ads Area

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடம் !

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)


இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


உலக தற்கொலை தடுப்பு தினம் - 2025 ஒட்டி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமணையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே குறித்த விடையத்தை தெரிவித்துள்ளார்.


மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தாம் சுகாதார துறைசார்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வை பரப்ப முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe