(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண காலநிலை வெள்ளப்பாதிப்பு காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.
27 ஆம் தேதி நடைபெற இருந்த வழக்குகள் யாவும் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடத்துவதற்கும், 28ஆம் தேதி நடைபெற இருந்த வழக்குகள் யாவும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருக்கின்றார் .

