கடந்த தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் முதன்மையாக பேசப்பட்ட சம்மாந்துறை CTB பஸ் டிப்போ பிரச்சனையானது இன்று (03.11.2025) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக இன்று சம்மாந்துறை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு அதன் முதற்கட்டமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பங்குபற்றலுடன் ஊர் பொதுமக்களும் சேர்ந்து அதனை எதிர்கால நடவடிக்கைக்காக அதனை தயார் நிலைக்கு கொண்டு வந்தனர்.
இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் விமல் ரத்னாயக்க, அபிவிருத்தி கிராமிய பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய பிரதான முகாமையாளர்(CRM) ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்,சம்மாந்துறை தொகுதி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், போக்குவரத்து சபையின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-ஊடக பிரிவு-



