Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை.

அரச உத்தியோகத்தர்களுக்கான நிதியியல்,மற்றும் தாபன விதிமுறைகள் சம்மந்தமான  ஒருநாள் பயிற்சிப்பட்டறை நேற்று (24) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. 


இப் பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில் ஆகியோர் கலந்து கொண்டு நிதியியல் மற்றும் தாபன கோவை சம்மந்தமாக தெளிவுபடுத்தினர். 


பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸாவின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இப் பயிற்சி நெறியானது நிர்வாக உத்தியோகத்தரின் நெறிப்படுத்தலுக்கிணங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல் பிர்தெளஸியாவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சிப் பட்டறை நிகழ்த்தப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe