Ads Area

சம்மாந்துறையில் உள்ள பிரபல உணவகத்தில் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த உணவுப்பொருட்கள் - தாய், மகள் வைத்தியசாலையில்.

 பாறுக் ஷிஹான்.


பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியிலிருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு நேற்று (6)  நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியிலிருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட  பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன.


குறித்த உணவகத்தில் உணவைப்பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் ஆகியோர்  உணவு நஞ்சாதலால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், பிரபலமான குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe