சம்மாந்துறை அன்சார்.
தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணத்தை கண்டுபிடித்து சாதனை படைந்த சம்மாந்துறை மாணவனுக்கு சம்மாந்துறை பிரதேச சபையினால் ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை அல் - அமீர் வித்தியாலத்தின் தரம் 09 கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம் கண்டுபிடித்த தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றதும் குறிப்பிடத் தக்கதாகும்.
அவரின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலேயே சம்மாந்துறைப் பிரதேச அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் மாணவருக்கு (50,000/=) ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.


