இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு (29) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி,வெளிக்களப் பிரிவின் முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமத யூ.எம்.பஸீல்,கலாசார உத்தியோகத்தர் றஸ்மி எம் மூஸா, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கௌசல்யாவாணி, விளையாட்டு உத்தியோகத்தர் ஐ.சுலக்சன் ,தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம் வாஜித் அலி,உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்.எம்.எல் நஜீமா,சமூதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் டீ.மேனகா,மற்றும் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையொப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





