நேற்று (24) ஏறாவூர் நகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சிக்கடையொன்றினால் விற்பனை செய்யப்பட்ட இறைச்சியில் ஒரு வகை புழு போன்ற அமைப்பில் காணப்பட்டமை தொடர்பில் தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.நழீம் அவர்களின் கவனத்திற்கு உறுப்பினர் அஸ்மி அவர்களால் கொண்டு சென்றமையைத் தொடர்ந்து, உடனடியாக இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதேவேளை, மறு அறிவித்தல் வரை குறித்த கடையினை மூடவும் தவிசாளர் அவர்களால் சுகாதாரத் துறைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த புழுவானது மாட்டின் நோயோடு தொடர்பு பட்ட விடயமல்ல என்றும், கொசுக்கள் முட்டை இட்டதால் இவ்வாறு ஏற்பட்டதாக இறைச்சிக்கடை உரிமையாளரால் விளக்கமளிக்கப்பட்ட போதும், இதை சாதாரண ஒரு விடயமாகக்கருத முடியாது. மக்களின் சுகாதார நலனில் கவனயீனச்செயற்பாட்டை ஒரு போதும் தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இறைச்சிக்கடைகளை முறையாக ஒழுங்குபடுத்தும் விடயத்தில் ஆரம்பம் முதலே தான் வழிகாட்டல்களை வழங்கியிருந்த நிலையில் இவ்விவகாரத்தில் தான் ஒரு போதும் நெகிழ்வு போக்கைக்கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் தவிசாளர் சகல இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.



