Ads Area

சவுதி விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் பணமின்றி தவித்த இலங்கைப் பணிப்பெண் - மீட்டு உதவிய IWF

கடந்த பிப்ரவரி 23 அன்று, சவுதி அரேபியா அப்ஹாவிலிருந்து வேலைக்காக ஜித்தா வந்த சாந்தி என்ற இலங்கைத் தமிழ் பெண், பாஸ்போர்ட் மற்றும் பணமின்றி விமான நிலையத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக தவித்துள்ளார். 


தகவல் அறிந்த தொண்டு அமைப்பான இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) நிர்வாகிகள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைத் தொடர்பு கொண்டு உரிய பாதுகாப்பு அளித்தனர்.


நிர்வாகிகள் பனங்காட்டூர் அப்துல் ஹலீம், காரைக்கால் அப்துல் மஜீத் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில், சமூக நலத்துறை துணை செயலாளர் நெல்லிக்குப்பம் அஷ்ரப் அப்பெண்ணிற்கு உணவு வழங்கி, பாதுகாப்பாக அழைத்துச் சென்று இலங்கை தூதரகத்தில் ஒப்படைத்தார். ஆபத்தான சூழலில் இருந்த சகோதரியை மீட்ட IWF அமைப்பினரின் இந்தச் செயல் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.


தகவல் - சவுதி நிவுஸ்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe