Ads Area

திருமலை -ஓட்டமாவடி வீதியில் விபத்து : முதலுதவியளித்த வெளிநாட்டவரின் மனிதாபிமானம்.

 பெளசுல் ஹமீட்.


நால்வர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.


ஓட்டமாவடி- திருமலை வீதியில் காயங்கேணி பாலத்தில் சற்று முன்னர் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது. 


திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாகப்பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காயங்களுக்குள்ள அனைவரும் இரு 1990 அம்பியுலன்ஸ் வண்டிகள் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இப்பாதை வழியே பயணித்த இரு வெளிநாட்டவர்கள் தங்களிடமிருந்த முதலுதவி உபகரணங்களைக் கொண்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான முதலுவி சிகிச்சைகளை உடனடியாக மேற்கொண்டிருந்தமை நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe