மஜீட். ARM.
சம்மாந்துறை KM/ST/தாருல் உலூம் வித்தியாலயத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய மலசலகூடத் தொகுதி (29) உத்தியோகபூர்வமாக மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.
சமூக ஆர்வலர் திரு. இர்ஷாத் ரஹீம் (Greenland அறக்கட்டளைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் Saffiya கட்டுமானத் திட்டப் பணிப்பாளர்) அவர்களின் நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் மிக நேர்த்தியாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தி, ஒரு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
2026 ஜனவரி 29 இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட இப்புதிய வசதிகள், பாடசாலையின் வளர்ந்து வரும் சமூகத்தின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க அமைந்துள்ளது.




