சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரான கௌரவ எம்.ஐ.எம் றிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் 2026-03-10 அன்று நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் 9வது சபை அமர்விற்கு முன்னதாக தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனாான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்விகான் 2026-03-05 அன்று அவரது இல்லத்தில் இப்தார் நிகழ்வோடு ஏற்பாடு செய்து வட்டாரப் பிரச்சினைகள், தேவைகள் குறித்து மக்களோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.
இந் நிகழ்வில் தான் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினுடைய எதிர்கால அரசியல் வெற்றிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். அதோடு நிகழ்வில் கலந்து கொண்ட வட்டார மக்களின் வட்டார அபிவிருத்தி, தேவைகள், பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இக் கலந்துரையாடல் நிகழ்விற்கு வீரமுனைப் வட்டாரத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட சகல துறை சார்ந்த மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.





