Ads Area

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கூட்டம்: எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு!



✍️மஜீட். ARM 



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழுவின் முக்கிய கலந்துரையாடலும் சந்திப்பும் நேற்று (17) திகதி வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி (Sports Complex) கூட்ட மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி MM. சஹ்பீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான A.M.தபீக், M.அஷீஸ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான S.ஜனாப், S.M.நிலோபா,MC.நௌஷா,AI.றிபானா,MI.சபியா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் சட்ட இளமானி அர்ஷத் இஸ்மாயில், மத்திய குழு செயலாளர் அஸாறுடீன் சலீம் மற்றும் வேட்பாளர்கள் , மத்திய குழு உறுப்பினர்கள், போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, கட்சியின் எதிர்காலப் பணிகளை சம்மாந்துறை தொகுதியில் முறையாக ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயற்குழு ஒன்றும் இதன்போது உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டது.


இதன்போது பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதனால் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் நிலவும் அரசியல் நிலையை சீர்செய்து, கட்சியின் செயற்பாடுகளை மீளவும் வீரியத்துடன் முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.


​தொடர்ந்து இடம்பெற்ற ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களின் போது, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவது மற்றும் ஊரின் தேவைகளை அரசியல் ரீதியாக அணுகுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.


இந்த முக்கிய அமர்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe