Ads Area

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்.

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (29) புதன்கிழமை ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்டது.


காத்தான்குடி பிரதேச செயலக  பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தின் வழிகாட்டலில் இவ் மருத்துவ முகாம் நடைபெற்றது.


மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூணானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் எல்.பவித்ரா கலந்து கொண்டு வைத்திய பரிசோதனைகளை மேற் கொண்டதுடன் இலவசமாக ஆயுர் வேத மருந்துகளும் வழங்கப்பட்டன.


இதன் போது பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் , சமுக சேவை உத்தியோகத்தர் எம்.நஜிமுதீன், முதியோர் இல்ல நிருவாகிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe