(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராம சேவகர் பிரிவுகளில் இவ் வருடம் தெரிவு செய்யப்பட்ட 11 பயனாளிக்களின் வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும், வீடு கட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் நேற்று (03) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் மல்வத்தை கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கரையோர பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாசீர் கலந்து கொண்டதோடு ,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வை.பி.எம் நவாஸ், எஸ்.டனோஜன்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எஸ்.எம் ஆரீப்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.எம் முஸ்தபா,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ ரக்கீபா,தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.ஜே.எம் ரிஸ்வான்,கிராம சேவகர்கள் சமூக வலூவூட்டல் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இவ் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து வீடுகளும் அமைப்பதற்கு அமைச்சு மட்டத்தில் அனுமதி வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.




