சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை பகுதியில் (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட விசேட புதன் சோதனையின் போது, மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்த உணவகம் ஒன்று சம்மாந்துறை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் முற்றுகையிடப்பட்டது.
இந்த திடீர் சோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற பல உணவுப் பொருட்கள் மற்றும் சோறு என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட அசுத்தமான உணவுப் பொருட்கள் அனைத்தும் உடனடியாக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சான்றுகளாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
வழக்கை ஆராய்ந்த நீதவான், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்த அந்த உணவுப் பொருட்களை உடனடியாக அழித்தொழிக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், குறித்த உணவு நிலையத்தை மறுஅறிவித்தல் வரை உடனடியாக மூடி சீல் வைக்குமாறும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
"நீங்கள் உணவருந்தும் இடங்களின் சுகாதாரத் தன்மையை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இவ்வாறான சுகாதாரமற்ற உணவகங்கள் ஏதேனும் இயங்கி வந்தால், அது குறித்து உடனடியாக எமக்கு அறியத்தாருங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு அனைவரும் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்படுவோம்!"



