அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இதன் மூலம் நெற் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு இடம்பெற்று முடிவடந்த நிலையில் மிகிதம் உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவினை தனியார் அரிசி ஆலை ஊடாக பெற்றுக்கொள்வது சம்பந்தமான கலந்துறையாடல் நேற்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துறையடலில் உதவி பிரதேச செயலாளர் வி.வாசித் அஹமட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.டி றிஸ்வான், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.டி.எம் மனாஸ், ஏ,சாஜிதா,எம்.பி பஸ்மினா மற்றும் அரிசி ஆலை உரிமையளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

