மஜீட். ARM.
மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று (செப்டம்பர் 13) கண்டெடுக்கப்பட்ட ச*ட*லம், காணாமல் போன சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இளைஞருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞரே இவ்வாறு மாவடிப்பள்ளி ஆற்றில் ச*ட*லமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த நிலையில், தேடுதல் நடத்தி வந்த குடும்பத்தினரால் தற்போது ச*ட*லம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

