சம்மாந்துறை பிரதேச செயலக இந்து கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில், கல்விக்கும் கலைக்கும் அதிபதியான கலைமகளின் அருளை வேண்டி நிற்கும் ‘வாணி விழா’ நிகழ்வுகள் இன்று (19) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கோலாகலமாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன், உதவி பிரதேச செயலாளர் வீ. வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், பிரதம முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் சிவஸ்ரீ கு. நிர்மலஸ்வர குருக்களினால் சிறப்புப் பூஜைகள் நடாத்தப்பட்டு ஆசிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

