கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், PSDG – 2026 வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான குறுந்திரைப்படக் காட்சிப்படுத்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றதுடன், கல்லூரியின் அதிபர் M.I. மஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஹனீபா கலந்து சிறப்பித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்குறுந்திரைப்படக் காட்சிப்படுத்தல் நிகழ்வு, மாணவர்களின் கலை ஆர்வத்தையும் படைப்புத் திறனையும் மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.




