Ads Area

சம்மாந்துறை பத்திரகாளி அம்பாளின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு நாளை ஆரம்பம்!

 வி.ரி. சகாதேவராஜா.


வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி  ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு வைபவம் நாளை 02ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.


தொடர்ச்சியாக 10 தினங்கள் சடங்கு இடம்பெற்று , எதிர்வரும் 11ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது.


காரைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் கப்புவனார் க.பாஸ்கரனின் ஆசீர்வாதத்துடன், ஆலயபிரதம பூசகர் நேமிநாதன் நிரோஸ் ( ஆசிரியர் ) தலைமையில் சடங்குகள் இடம்பெற இருக்கின்றது .


தினமும் பகல் பூசை 1.00 மணிக்கும் ,இரவு பூசை 7 மணிக்கும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.


04ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணிக்கு ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற இருக்கின்றது.


09ஆம் தேதி  வெள்ளிக்கிழமை முத்துச்சரம் புறத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.


11ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை  காலை 6 மணிக்கு மஞ்சள் குளிக்கும் நிகழ்வு இடம் பெற்று தீமிதிப்பு வைபவம் இடம்பெறும் . கூடவே ,அன்று அன்னதான நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.


இறுதியாக 18 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டாம் நாள் வைரவர் இடும்பன் திருச்சடங்கு இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கின்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe