சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் , சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்புரி அமைப்பினால் ( Well Wishers Of BH/Str) அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நலன் விரும்பிகளால் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இயங்கிவரும் சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்விரும்பி அமைப்பினால் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சுத்தமான நீரை அருந்த வேண்டும் என்ற நோக்கில் இரண்டு நீர் சுத்திகரிக்கும் உபகரணங்கள் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்திகட்சகர் Dr. YBM அப்துல் அஷீஷ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.