Ads Area

சம்மாந்துறையின் பாரம்பரியப் பொருட்களின் காட்சிப்படுத்தலோடு ஆரம்பமான மாபெரும் கலாச்சார விழா.

நன்றி - ஜலீல் ஜீ மற்றும் மொஹமட் ஷாகீர்.

சம்மாந்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசாரவிழா சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் நேற்றுமுன்தினம் (29) இடம்பெற்றது. 

இதன்போது கலாபூசணம் மாறன் யூ.செயின் எழுதிய “இரத்த நரம்புகள்” நூல் அறிமுகமும், பட்டறை மலர் வெளியீடும், “சுவதம்” கலைஞர் கௌவிப்பும் மற்றும் சான்றிதழ் வழங்கலும் இடம்பெற்றது. 

அத்தோடு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களும், சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும்  சிறப்பு மலரான “பட்டறை” மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. பட்டறை மலரின் துணை ஆசிரியர்களாக இப்றாஹீம் ஜலீல் (ஜலீல் ஜீ) மற்றும் மொஹமட் ஷாகீர் அவர்களும், பிரதம ஆசிரியர்களாக பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மின் மூஸா அவர்களும் செயற்பட்டார்கள்.

மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறையில் உள்ள இலக்கியம், ஊடகம், புகைப்படம் போன்ற பல் துறைகளில் ஆளுமை படைத்த கலைஞர்களுக்கு அவர்களின் கலைத்திறைனைப் பாராட்டி “சுவதம்” விருதும் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், போராசிரியர் றமீஸ் அப்துல்லா, சம்மாந்துறை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வி. ஜெயச்சந்திரன் மற்றும் களைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற கலாசார விழா மேடையில் சம்மாந்துறையில் பயண்படுத்தப்பட்ட மற்றும் பயண்பாட்டில் உள்ள சுமார் 30 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கதாகும்.

01. உமல்
02. மீன் கூடை
03. கைப்பெட்டி
04. கரப்பு
05. மரைக்கால்
06. அம்மி
07. குழவி
08. இடியுரல்
09. உரல்
10. உலக்கை
11. பருத்திமனை
12. ஏத்து
13. சிறாம்பி
14. சோலைக்காட்டு பொம்மை
15. பன்தொப்பி
16. அரிக்கன்லாம்பு
17. அத்தாங்கு
18. உறி
19. மண்சட்டி
20. உலாமடி
21. கால் குரச்சி
22. அகப்பை
23. பன்பை
24. பன்கூடை
25. கோழிக்கூடு
26. கேட்டிக்கம்பு
27. துறட்டி
28. வேலைக்காரன் கம்பு
30. வலை
31. வண்டில்
32. சுடுவான்
33. தாராப்புட்டி
34. பனைஓலைப்பெட்டி
35. கடகம்
36. வட்டா
37. கொள்ளி
38. கிடுகு
39. பாய்
40. பாயசவு
41. தாக்கத்தி
42. சாக்கு
43. அவரி
44. பிரம்புக்கூடை
45. பிரம்புவடி
46. வாட்டிக்கம்பு






















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe