Ads Area

சம்மாந்துறையின் அபிவிருத்திக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிரின் பாரிய திட்டம்.

சம்மாந்துறை பிரதேச சபையினை ஜப்பானின் ஹஷீமா நகரத்துடன் இணைக்கும் திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையினால்; அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டமானது பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிரினால் கடந்த 2018.05.15 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணங்கவே இவ்வாறு அங்கீகரிக்கபட்டது.

ஜப்பானின் ஜிபு மாவட்டத்தின் ஹஷீமா நகரம் இலங்கையுடன் நெருக்கமான தொடர்பினை கொண்ட நகரமாகும். இதன் சனத்தொகை சம்மாந்துறையின் சனத்தொகையோடு சரிசமமாக காணப்படுகின்றது. மற்றும் ஹஷீமா நகரம் விவசாயத்தினை பிரதானமாக கொண்ட நகரம் என்பதனாலும், எதிர்வரும் 2020 இல் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் போட்டியின் போது இலங்கையை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நகரமும் இது என்தால் இவ்விரண்டு நகரகங்களையும் இணைத்து உறவினை வலுப்படுத்தும் செயற்றிட்டமே இதுவாகும்.

மேலும் இந்த பிரேரணையை கொண்டுவந்த பிரதேச சபை உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மாஹிர் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“சகோதர நகரத்திட்டமென்பது ஒரு நாட்டின் உள்ளுராட்சி சபையை இன்னொரு நாட்டின் உள்ளுராட்சி சபையுடன் இணைத்து செயற்படுத்துவதன் மூலம் இரண்டு நகரங்களுக்குமான ஒத்துழைப்பு, நல்லெண்ண விஜயங்கள், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை மே;படுத்துவதோடு இரு நகர உறவுகளையும் வலுப்படுத்தி அபிவிருத்தி செய்யவும் முடியும்.

மேலும் எனக்கு இருக்கின்ற தனிப்பட்ட உறவுகளைப்பயன்படுத்தி இத்திட்டத்தை நானே முன்னெடுத்துச்சென்று ஊரின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்புவழங்க உள்ளேதோடு, என்னால் முன்னொழியப்பட்ட இப் பிரேரணையை அங்கீகரித்த சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களுக்கும் சபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் – என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe