சப்னான் முஹம்மட்.
புகைப்படத் துறையில் அதிகளவான அடைவு மற்றும் விருதுகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து முதல் முறையாக பெற்ற புகைப்படக் கலைஞர் சம்மாந்துறையைச் சேர்ந்த பிரோஸ் என்பது யாவரும் அறிந்த விடயமே. புகைப்படத் துறையில் தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டிற்கான sony alpha festival இல் கூட இவருடைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள ஒரு சில புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது அதில் எம் கிழக்கு மண்ணைச் சேர்ந்த தமிழ் பேசும் ஒருவரும் என்பதில் நாம் பெருமையடைகின்றோம்.. இவ்வாறான கலைஞர்களை நாம் பாராட்ட வேண்டியது எம் கடமையாகும்.