Ads Area

முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக் காய் இவைகளின் அளவில்லாத ஆராக்கிய நன்மைகள்.

உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக விளங்குவதும், வலி, வீக்கத்தை போக்கும் தன்மை உடையதுமான முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.


முருங்கை கீரை.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

முருங்கைக் காய்

முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது.

முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe