சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள தாருஸ்ஸலாம் பாடசாலை கிழக்கு வீதி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் 2018.09.21 வீரகேசரி பத்திரிகையில் கேள்வி அறிவித்தல் கோரப்பட்டு காபட் வீதியும், வடிகானும் செப்பனிடப்படவுள்ளது.
இவ்வீதியினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் பிரதேச மக்களின் குறைபாடுகளையும் கேட்டரிந்து கொண்டார்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சபீக் இஸ்மாயில் அவர்களும் சென்றனர்.