பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சுதேச திணைக்களத்தின் விஷேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஹெல சுவய நிறுவத்தின் ஊடாக ”நஞ்சற்ற பாரம்பரிய உணவு” எனும் தொனிப்பொருளில் உயிர்கொல்லி தொற்றாய் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மஞ்சந் தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தலைமையில் விம்பில்டன் ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவுக்கான ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ.நபில், வைத்தியர்களான இஸ்காக், ஹம்ஸத், தாதிய தோதனாசிரியர் பீ.தேவரஜனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உயிர்கொல்லி தொற்றா நோய்களிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் நஞ்சற்ற பாரம்பரிய உணவை நாம் உண்பதால் எவ்வாறான பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற மிகத் தெளிவான விளக்க உரையினை மாகாண சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் வழங்கி வைத்தார்.