Ads Area

அக்கரைப்பற்றிலும் டியூஷனுக்குத் தடை; மேயர் அஹமட் ஸக்கி அறிவிப்பு..!

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும், மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தடை செய்யப்படுவதாக அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அஹமட் ஸக்கி தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இயங்கிவரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும், மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனியார் கல்வி நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னரும், க.பொ.த உயர்தரத்துக்கான வகுப்புகளை ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரும் ஆரம்பிக்குமாறும், இதுவரை பதிவுசெய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள், மாநகர சபையில் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்த டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தனியார் கல்வி நிலையங்களில் பிரத்தியேக வகுப்புகள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்கடந்த 05 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe