அவசரமான பயனத்துக்காக பிற்பகல் 6 மணியளவில் கொழும்பிலிருந்து - சம்மாந்துறை வரை செல்வதற்காக வழக்கமாக நான் பயணிக்கும் பஸ் உரிமையாளரிடம் 'சீட்' கேட்டேன் அவர் கூறினார் "எனது பஸ்ஸின் எல்லா 'சீட்ஸ்' உம் 'புக்கிங்' வேறு வெளியூர் பஸ்ஸில் போடவா" என்று,
சம்மாந்துறை வரை செல்லுமா என நான் கேட்டபோது அவர் 'ஓம் மச்சான் போகும், அது நல்ல பஸ் என்றார்'. நானும் சரி போடுங்கள் என கூறிவிட்டு உரிய பஸ்ஸில் ஏறி பயணம் ஆரம்பம்......
இனித்தான் இருக்கின்றது அநியாயத் தொடரனி:
1. கேட்டபோது 'சுப்பர் லைன்' என்று பெருமை பாடுகிறார்கள், பஸ் 'சீட்' ஒரு நபர் அமர இரண்டு ஆசனம் தேவை. (அந்தளவு நெருக்கம்)
2. வழக்கமாக 1000 ரூபா இருந்தது எரிபொருள் விலை ஏற்றத்தால் 1100 ரூபா ஆனது, சரி பராவாயில்லை என விட்டாலும் இவரின் வெளிப்பகட்டு 'சுப்பர் லைன்' இற்கு 1200 ரூபா.
3. பேசி வந்தது ஊர் வரை போகும் என்று. பஸ்ஸிற்குள் மொத்தமாக சம்மாந்துறையர்கள் 6 பேர் எனவே விரும்பியோ விரும்பாமலோ அவர் சம்மாந்துறை வந்தார். பொலிஸ் வீதியில் ஒருவர் இறங்க மற்ற நால்வரும் ஹிஜ்ரா பள்ளிவாசல் முன்பாக இறங்கினர். மீதி நான் மட்டும், அச் சமயம் நான் கூறினேன் "நேராக செல்ல வேண்டாம் அம்பாறை வீதியூடாக செல்லுங்கள் நான் வழக்கமாக தகிய்யா பள்ளி முன்பாகவே இறங்குவேன்" என்று.
அதற்கு கூறினார், "அது 'ரோடு' மோசம் நான் பொலிஸ் வீதியால்தான் செல்வேன் என்றார். (அம்பாறை வீதி பஸ் செல்வதற்கு மோசம், போக முடியாது என கூறிய முதல் சாரதி இவர்தான்)
நானும், அவருடன் குழம்பிவிட்டு ஹிஜ்ரா சந்தியில் இறங்கி முச்சக்கர வண்டியில் வீடு சேர்ந்தேன். இங்கு புலப்படும் விடயம் யாதெனில் எரிபொருள் விலை ஏறினால் பஸ் கட்டனம் கூடுது. தற்போது எரி பொருளுக்கு விலை குறைந்தும் இவருடைய பஸ்ஸிற்கு மட்டும் 100 ரூபா அதிகம் இது எவ்வகை 'லொஜிக்'. பண்பாடும், மன சாட்சியுமில்லாத சாரதி, நடத்துனர்கள் விடயத்தில் குறித்த உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இது ஒரு புறமிருக்க பிறிதொருவரின் அவாலைக் கூறுகின்றேன்,
அதாவது, தகிய்யா பள்ளியடியில் இறங்கியிருந்தால் 100 மீ. தூரமே எனது வீடு.
பஸ் குழப்பத்துடன் ஹிஜ்ராவில் இருந்து வீடு வரை செல்ல 'ஆட்டோ' வில் ஏறி வீட்டுக்கு முன்னாள் இறங்கியபோது, அவர் 150 ரூபா கேட்டார் 1 கி.மீ தூரம் தான் ஹிஜ்ரா முதல் எனது வீடு வரை இருந்த போதிலும் சுற்றாலா பயணியிடம் கதை கூறுவது என்னிடம் சில விளக்கங்கள் தந்தார்.
(அதிகாலை மீண்டும் குழப்பம் வேண்டாம் என்று எதுவும் பேசாமல் அவர் கேட்ட தொகையை கொடுத்தனே்)
இங்கு குறிப்பு என்னவென்றால் அவர் தொப்பி அணிந்து, சிறந்த முஸ்லிமாக இருந்தார் இதே வேலையை ஒரு மாற்று மதத்தவருக்கு செய்தால் அவர்கள் சித்திரிக்க போவது முழு முஸ்லிம்களையும் தான்.
மேலும், மேற்கூறியது போல் பொய்ச் சோடிப்பில் 'சுப்பர் லைன்' செய்வர்களின் பஸ்களை பொலிஸ் போக்குவரத்து பிரிவினரூடாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் இன்று சட்டநடவடிக்கைக்கு சென்றிருப்பேன். ஏதோ அவரின் நல்ல காலம் என்னிடம் அவர் பற்றுச் சீட்டுl தரவில்லை. நான் கேட்கவும் இல்லை.
அநியாயங்களில் இறைவனை பயந்து கொ்ளுங்கள்.
ஒப்பீட்டளவில் எமது சமூகத்தாரை விட மாற்றுமத்தினரின் பஸ் சேவை நல்லது.
~ கியாஸ் ஏ. புஹாரி