சம்மாந்துறை கயர் பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
கயர் பாலர் பாடசாலையின் அதிபர் ஏ.வீ.லைலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது கயர் பாலர் பாடசாலை நிர்வாகத்தினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.