கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தினால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு மாவட்டங்களிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 40 இற்கும் அதிகமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.