பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியின் பலனாக நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 02 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மூலம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசதி குறைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் 115 குடும்பங்களுக்கு மலசலகூடங்களை நிர்மாணிப்படவுள்ளது.
இதற்கான அனுமதிக் கடிதங்களை கையளிக்கும் வைபவம் நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் முதற்கட்டமாக 50 பயனாளிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரினால் மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதிக் கடிதங்களை கையளித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.